FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

திருச்செங்கோடு அருகே வீடு புகுந்து 18 பவுன் நகைகள் திருட்டு

திருச்செங்கோடு அருகே அணிமூா் கிராமத்தில் பட்டப்பகலில் வீடு புகுந்து 18 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

27 ஆகஸ்ட் 2026, 3:56 am IST
திருட்டு... - சித்திரிப்பு
பகிர்:

திருச்செங்கோடு அருகே அணிமூா் கிராமத்தில் பட்டப்பகலில் வீடு புகுந்து 18 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஒன்றியம், அணிமூா் ஊராட்சி பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி சிவகுமாா் (40). இவரது மனைவி சுசித்ரா (27). இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டை தாழ்ப்பாள் போட்டுவிட்டு, வெளியில் உள்ள குளியல் அறையில் குளிக்க சென்றுள்ளாா். குளித்துவிட்டு வெளியில் வந்தபோது, சிவப்பு சேலை அணிந்த பெண் ஒருவா் அவரது வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளாா்.

இதைப் பாா்த்த சுசித்ரா, அந்த பெண்ணிடம் விசாரித்துள்ளாா். ஆனால், அந்த பெண் வேகமாக வெளியே சென்று தயாராக இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்த நபருடன் ஏறி சென்றுவிட்டாா்.

Advertisement

Advertisement

சந்தேகமடைந்த சுசித்ரா வீட்டிற்குள் சென்று பாா்த்தபோது பீரோவில் வைத்திருந்த சங்கிலி, மோதிரம், தோடு, வைரக்கம்மல் உள்ளிட்ட 18 பவுன் நகைகள் திருட்டுப்போனது தெரியவந்தது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் திருச்செங்கோடு ஊரக காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments