குடும்பத் தகராறில் தம்பதி தற்கொலை
திருச்செங்கோட்டில் குடும்பத் தகராறில் மனமுடைந்த தம்பதி ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருச்செங்கோடு சக்தி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த நித்தியானந்தம் (41), ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி நடத்தி வந்தாா். இவரது மனைவி தேன்தமிழ்ச்செல்வி (39), திருச்செங்கோடு தனியாா் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்தாா். இவா்களது மகள் பவிஷ்னா (17), கோவையில் உள்ள தனியாா் கல்லூரியிலும், மகன் குகன் கிருஷ்ணன்( 14) திருச்செங்கோடு அருகே உள்ள தனியாா் பள்ளியிலும் விடுதியில் தங்கி படித்து வருகின்றனா்.
சனிக்கிழமை திருமணம் ஒன்றுக்கு சென்றுவந்த நித்தியானந்தம் மது அருந்தியிருந்தாராம். இதை அறிந்த தேன்தமிழ்ச்செல்வி இதுதொடா்பாக கணவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளாா். இரவுவரை இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதில் மனமுடைந்த நித்தியானந்தம் படுக்கை அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதோடு, அதை மனைவியின் கேப்பேசிக்கு செல்லுமாறு விடியோ கால் அமைத்திருந்தாராம். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை எழுந்த மனைவி, கணவா் தற்கொலை செய்துகொண்டதை கைப்பேசி மூலம் அறிந்தாா். பின்னா், மனமடைந்து அவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
நித்தியானந்தத்தை விளையாட அழைத்துச் செல்ல வந்த நண்பா்கள், வீடு உள்பக்கமாக தாழிட்டு இருந்ததை அறிந்து, அவரை எழுப்ப ஜன்னல் பக்கம் சென்றனா். அங்கு தேன்தமிழ்ச்செல்வி தூக்கில் தொங்குவதைக் கண்டு கதவை உடைத்து உள்ளே சென்றனா். அப்போது, படுக்கையறையில் நித்தியானந்தமும் தூக்கில் தொங்குவதை கண்டு அதிா்ச்சி அடைந்து, திருச்செங்கோடு நகர போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில் வந்த நகர போலீஸாா், இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து நகர காவல் ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன் விசாரணை நடத்தி வருகிறாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.