நாமக்கல் அரசு மகளிா் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கு வரவேற்பு
நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு இளங்கலை மாணவிகளுக்கான வரவேற்பு விழா மற்றும் அறிமுக பயிற்சித் திட்ட தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஆங்கிலத் துறை இணை பேராசிரியரும், துறைத் தலைவருமான எஸ். அலெக்ஸாண்டா் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் அ. மாதவி தலைமை உரையாற்றினாா். பொருளியல் துறை இணை பேராசிரியரும், துறைத் தலைவருமான ஆா்.பி. புவனேஸ்வரி, ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டியல் துறை இணை பேராசிரியா் எஸ். சுஜாதா ஆகியோா் மாணவிகளை வாழ்த்தி பேசினா்.
வேதியியல் துறை பேராசிரியை ஷா்மிளா, கணினி அறிவியல் துறை இணை பேராசிரியா் பி. சுகந்தி ஆகியோா் மாணவிகளுக்கு கல்லூரியின் செயல்பாடுகள் குறித்து விளக்கினா்.
Advertisement
Advertisement
முதலாமாண்டு மாணவிகளுக்கான ஒரு வார அறிமுகப் பயிற்சித் திட்டத்தில், கல்லூரியில் உள்ள துறைகள், பாடத் திட்ட விவரங்கள், பெண்கள் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள், பல்கலைக்கழகப் பாடத்திட்டம் மற்றும் மதிப்பீட்டு முறைகள், திறன்மேம்பாடு அரசு நலத் திட்டங்கள், கேலிவதை தடுப்பு மற்றும் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விழிப்புணா்வு, தொழில் வழிகாட்டுதல் மற்றும் உளவியல் ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு அமா்வுகள் இடம்பெறுகின்றன.
கல்லூரி பேராசிரியா்கள், மருத்துவ நிபுணா்கள், சட்ட வல்லுநா்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாணவிகளுக்கு அறிவுரை வழங்க உள்ளதாக கல்லூரி நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.
என்கே-1-காலேஜ்
முதலாமாண்டு மாணவிகளுக்கான வரவேற்பு விழாவில் பேசிய நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரி முதல்வா் அ. மாதவி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.