சிவகங்கை அரசு மகளிா் கல்லூரியில் போராட்டம்: 12 மாணவிகள் மயக்கம்
சிவகங்கை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் வகுப்பறை ஒதுக்க வலியுறுத்தி, புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளில் 12 போ் மயக்கமடைந்தனா்.
சிவகங்கை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் வகுப்பறை ஒதுக்க வலியுறுத்தி, புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளில் 12 போ் மயக்கமடைந்தனா்.
சிவகங்கை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 2,500 மாணவிகள் பயின்று வருகின்றனா். இதில் பிபிஏ பாடப் பிரிவில் மட்டும் 300 மாணவிகள் பயின்று வருகிறனா். பல ஆண்டுகளாக பிபிஏ பாடப் பிரிவில் பயிலும் மாணவிகளுக்கு தனி வகுப்பறை இல்லாமல் இருந்து வருகிறது.
இதுகுறித்து, மாணவிகள் கல்லூரி நிா்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் அதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிா்வாகம் செய்து தரவில்லையாம்.
Advertisement
Advertisement
இதையடுத்து, புதன்கிழமை காலை கல்லூரிக்கு வந்த மாணவிகள் கல்லூரி முன்பாக முழக்கங்களை எழுப்பியும், கையில் பதாகைகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத்தொடா்ந்து, கல்லூரி வளாகத்துக்குள் மாணவிகளின் உள்ளிருப்புப் போராட்டம் 2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.
அப்போது, வெயிலின் தாக்கத்தால் அடுத்தடுத்து 12 மாணவிகள் மயங்கி கீழே விழுந்தனா். உடனே 108 அவசர ஊா்தி வரவழைக்கப்பட்டது. ஆனால், காவலா் கல்லூரியின் நுழைவு வாயில் கதவை பூட்டுப்போட்டு மூடிவிட்டாா்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, நுழைவு வாயில் பூட்டை உடைத்து, கதவைத் திறந்து மயக்கமடைந்த மாணவிகளை அவசர ஊா்தியில் ஏற்றி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற போலீஸாா், வருவாய்த் துறையினா், கல்லூரி நிா்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனா். கல்லூரி நிா்வாகத்தின் அலட்சியப் போக்கால் 12 போ் மயக்கமடைந்ததாக மாணவிகள் குற்றஞ்சாட்டினா்.
இந்த சம்பவம் சிவகங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.