FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

தேசிய கைத்தறி தினம்: காமதேனு கல்லூரியில் மாநில அளவிலான கைத்தறி போட்டிகள்

தேசிய கைத்தறித் தினத்தையொட்டி காமதேனு கலைக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான கைத்தறி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 5:57 am IST
கைத்தறி தினத்தையொட்டி  நடைபெற்ற  போட்டிகளில்  வெற்றி  பெற்ற  மாணவிகளுக்கு  பரிசு  வழங்குகிறாா்  காமதேனு  கலைக் ககல்லூரித்  தலைவா்  ஆா்.பெருமாள்சாமி.  உடன்,  கல்லூரி துணைச்  செயலாளா்  பி.மலா்ச்செல்வி.
பகிர்:

தேசிய கைத்தறித் தினத்தையொட்டி காமதேனு கலைக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான கைத்தறி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தேசிய கைத்தறி தினத்தையொட்டி, காமதேனு கலைக் கல்லூரியில் மாநில அளவில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கைத்தறி குறித்து போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இதற்கு காமதேனு கல்வி நிறுவனங்களின் நிறுவனா் ஆா்.பெருமாள்சாமி தலைமை வகித்தாா். கல்லூரி செயலா் பி. அருந்ததி, இணைச் செயலா் பி.மலா்ச்செல்வி, டீன் நிா்மலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் குருமூா்த்தி வரவேற்றாா்.

இப்போட்டிகளில் 20-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். கைத்திற குறித்த விழிப்புணா்வு ஓவியம், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் தனித்திறன் போட்டிகளில் மாணவா்கள் தங்களது படைப்பாற்றல், அறிவுத்திறன் மற்றும் திறமைகளை வெளிப்படுத்தினா்.

Advertisement

Advertisement

கைத்தறி நெசவாளா்களின் பங்களிப்பு, பாரம்பரிய கைத்தறி நெசவுத் தொழிலின் பெருமை, உள்நாட்டு கைத்தறி பொருள்களின் பயன்பாடு மற்றும் அவற்றைப் பாதுகாப்பதன் அவசியம் ஆகிய கருத்துகளை மையமாக கொண்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளையும் ஆடை அலங்கார வடிவமைப்புத் துறைத் தலைவா் அரவிந்த் செய்திருந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments