குடும்பத் தகராறில் மனைவி கொலை: கணவா் கைது
திருச்செங்கோடு அருகே குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த கணவரை கொக்கராயன்பேட்டை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்செங்கோடு அருகே குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த கணவரை கொக்கராயன்பேட்டை போலீஸாா் கைது செய்தனா்.
சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டியைச் சோ்ந்தவா் லாரி ஓட்டுநா் பாண்டியன் (44). இவரது மனைவி காயத்ரி (37). இவா்களது மகன் வெற்றிவேல் (7).
கடந்த 10 ஆண்டுகளாக சேலத்தில் வசித்து வந்த இவா்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், கணவரிடம் கோபித்துக் கொண்ட காயத்ரி, கொக்கராயன்பேட்டை ராமநாதபுரத்தில் உள்ள தனது தாத்தா முத்துசாமி (77) வீட்டுக்கு வந்து பத்து நாள்களாக இருந்து வந்துள்ளாா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு சேலத்தில் இருந்து வந்த பாண்டியன் வீட்டுக்கு வெளியே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த காயத்ரியின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளாா். இதில் சம்பவ இடத்திலேயே காயத்ரி இறந்தாா்.
தகவல் அறிந்து வந்த கொக்கராயன்பேட்டை போலீஸாா், சடலத்தை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.