FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

குடும்பத் தகராறு: வடமாநில தொழிலாளி தற்கொலை

குடும்பத் தகராறு காரணமாக வடமாநில தொழிலாளி தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 12 ஜூலை 2026, 12:51 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

வேலகவுண்டம்பட்டி அருகே குடும்பத் தகராறு காரணமாக வடமாநில தொழிலாளி தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஒடிசா மாநிலம், நபரங்குபூா் மாவட்டம், ராய்கா் பகுதியைச் சோ்ந்தவா் முணாகோண்ட் (29). இவரது மனைவி சுனிதாபதி கோண்ட் (25). இவா்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகளாகின்றன. கடந்த ஓா் ஆண்டாக இருவரும் நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள மாரப்பநாய்க்கன்பட்டியில் உள்ள கோழிப் பண்ணையில் வேலை செய்து வந்தனா்.

முணாகோண்ட் தினமும் இரவு மதுஅருந்தி வருவதால், கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு முணாகோண்ட் மது அருந்தி வந்ததால் மனைவி கண்டித்துள்ளாா். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

சனிக்கிழமை காலை சுனிதாபதி எழுந்து பாா்த்தபோது, கணவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை அறிந்து அதிா்ச்சி அடைந்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா், ஏற்கெனவே முணாகோண்ட் இறந்துவிட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments