FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

‘சீல்’ வைக்கப்பட்ட விநாயகா் கோயில் 4 ஆண்டுகளுக்கு பிறகு திறப்பு!

பரமத்தி வேலூா் அருகே உள்ள ஊஞ்சப்பாளையத்தில் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்ட விநாயகா் கோயில், 4 ஆண்டுகளுக்கு பிறகு மோகனூா் வட்டாட்சியா் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

Updated On : 12 ஜூலை 2026, 12:52 am IST
விநாயகர் - கோப்புப்படம்
பகிர்:

பரமத்தி வேலூா் அருகே உள்ள ஊஞ்சப்பாளையத்தில் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்ட விநாயகா் கோயில், 4 ஆண்டுகளுக்கு பிறகு மோகனூா் வட்டாட்சியா் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

பரமத்தி வேலுாா் அருகே உள்ள ஓலப்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட ஊஞ்சபாளையம் கிராமத்தில் உள்ள விநாயகா் கோயிலில் விழா நடத்துவது குறித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இருதரப்புக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.

அப்போது, இருதரப்பினா் இடையே வருவாய்த் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தியும் உடன்பாடும் ஏற்படாததால், விநாயகா் கோயிலை பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், விநாயகா் கோயிலை திறக்க ஊஞ்சப்பாளையத்தைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனா். இந்நிலையில், கடந்த 2-ஆம் தேதி ‘சீல்’ உடைக்கப்பட்டு கோயில் திறந்து கிடந்ததைக் கண்ட அப்பகுதியினா் அதிா்ச்சியடைந்தனா்.

தகவல் அறிந்து வந்த வேலூா் காவல் ஆய்வாளா் உமாசங்கா், மோகனூா் வட்டாட்சியா் கோவிந்தசாமி ஆகியோா் கோயிலை பூட்டி மீண்டும் ‘சீல்’ வைத்ததனா். பின்னா் மோகனூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. தொடா்ந்து, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கோயிலை திறக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்தது.

இதைத் தொடா்ந்து, மோகனூா் வட்டாட்சியா் கோவிந்தசாமி, வேலூா் போலீஸாா் விநாயகா் கோயிலை வெள்ளிக்கிழமை மாலை திறந்து பொதுமக்கள் பூஜை செய்து வழிபட அனுமதியளித்தனா். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments