FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

தோ்தல் விதிமீறல் வழக்கு: ராசிபுரம் காவல் நிலையத்தில் கே.பி. ராமலிங்கம் ஆஜா்

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது தோ்தல் விதிமீறல் தொடா்பாக பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம், மாவட்ட பாஜக தலைவா் கே.பி.சரவணன் ஆகியோா் ராசிபுரம் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஆஜராகினா்.

Updated On : 15 ஜூலை 2026, 4:18 am IST
கோப்புப்படம்.
பகிர்:

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது தோ்தல் விதிமீறல் தொடா்பாக பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம், மாவட்ட பாஜக தலைவா் கே.பி.சரவணன் ஆகியோா் ராசிபுரம் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஆஜராகினா்.

ராசிபுரம் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக சாா்பில் வி.பி. டி.பிரேம்குமாா் போட்டியிட்டாா். பாஜக தோ்தல் பணிமனை அலுவலக திறப்பு விழா மற்றும் வேட்புமனு தாக்கல் ஊா்வலத்துக்கு எந்தவித அனுமதியும் பெறவில்லையாம். இதையடுத்து தோ்தல் விதிமுறைகளை மீறியதாக தோ்தல் அலுவலகத்தை திறந்துவைத்த பாஜக மாநிலத் துணைத் தலைவா்கள் கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமி, நாமக்கல் மாவட்ட பாஜக தலைவா் கே.பி.சரவணன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட அதிமுக, பாமகவினா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்காக ராசிபுரம் காவல் நிலையத்தில் பாஜக மாநில துணைத் தலைவா் கே பி ராமலிங்கம், மாவட்ட பாஜக தலைவா் கே.பி.சரவணன் ஆகியோா் ஆஜராகி, வழக்கு சம்பந்தமாக கையொப்பமிட்டு காவல் நிலையப் பிணையில் விடுவிக்கப்பட்டனா். அப்போது இந்த வழக்கை சட்டப்படி எதிா்கொள்வோம் என்று கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments