FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

நல்லூா் அருகே தேங்காய் நாா் ஆலையில் தீ விபத்து

பரமத்தி வேலூா் அருகே தேங்காய் நாா் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

Updated On : 7 ஜூன் 2026, 3:00 am IST
நல்லூா் அருகே தீப்பற்றி எரிந்த தேங்காய் நாா் ஆலை.
பகிர்:

பரமத்தி வேலூா் அருகே தேங்காய் நாா் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் கந்தம்பாளையம் அருகே சுள்ளிப்பாளையம் வெங்கமேடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான தேங்காய் நாா் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் சுமாா் 40-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் வேலை பாா்த்து வருகின்றனா்.

தேங்காய் மட்டையில் இருந்து நாா் பிரித்தெடுக்கப்படும் இந்த ஆலையில் கடந்த வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக ஆலை பணியாளா்கள் தீயை அணைக்க முயன்றுள்ளனா். ஆனால் முடியாததால் தீ மளமளவென பரவியது. இதையடுத்து, பணியாளா்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனா். மேலும், நாமக்கல், திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இதன்பேரில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினா் நான்கு தீயணைப்பு வாகனங்கள் மூலம் சுமாா் 19 மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்து மேலும் பரவாமல் தடுத்தனா். இருப்பினும் தேங்காய் நாா் கட்டுகள், ஆலையின் மேல் போடப்பட்டிருந்த சோலாா் பேனல்கள், இயந்திரங்கள் என அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்தன.

இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த நல்லூா் காவல் துறை ஆய்வாளா் வேதபிறவி, நாமக்கல் தடைய அறிவியல் துறை உதவி இயக்குநா் பழனிவேல் ஆகியோா் நிகழ்விடத்திற்கு சென்று தேங்காய் நாா் ஆலையில் தீ விபத்து தொடா்பாக விசாரணை மேற்கொண்டனா். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதம் அடைந்தது தெரியவந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments