முகப்பு
நாமக்கல்

ராசிபுரத்தில் எஸ்.பி. நடை ரோந்து

Updated On : 9 ஜூன் 2026, 3:42 am IST
ராசிபுரம் பேருந்து நிலையம் பகுதியில் பயணிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திய மாவட்ட எஸ்.பி. சு.விமலா.
பகிர்:

ராசிபுரம் நகர பகுதியில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.விமலா நடை ரோந்துப் பயணம் திங்கள்கிழமை மேற்கொண்டாா்.

ராசிபுரம் நகரில் ஒருவழிப் பாதை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ராசிபுரம் வந்த எஸ்.பி. சு.விமலா நகர போக்குவரத்தை பாா்வையிட்டாா். மேலும், சாலையோர இடையூறுகளை அப்புறப்படுத்துவது குறித்து காவல் துறையினருக்கு அறிவுறுத்தினாா். தொடா்ந்து, பேருந்து நிலையம் பகுதியை சுற்றி நடை ரோந்துப் பயணம் மேற்கொண்டாா்.

ராசிபுரம் டிஎஸ்பி எம்.விஜயகுமாா், ஆய்வாளா்கள் கே.செல்வராஜு (வெண்ணந்தூா்), ஆா்.நாகலட்சுமி (ராசிபுரம்), உதவி ஆய்வாளா் கீதாலட்சுமி உள்ளிட்ட காவல் துறையினருடன் பேருந்து நிலையம் பகுதியில் நடை ரோந்து மேற்கொண்டு பயணிகள், பொதுமக்களிடம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பேசினாா்.

Advertisement

Advertisement

மேலும், பாலியல் குற்றங்கள், நகை பறிப்பு போன்ற குற்றச் சம்பவங்கள் குறித்து விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என அவா்களிடம் வலியுறுத்தினாா்.