FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

தலைமறைவு குற்றவாளிகள் இருவா் கைது

பள்ளிபாளையம், திருச்செங்கோடு, குமாரபாளையம் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய தலைமறைவு குற்றவாளிகள் இருவரை பள்ளிபாளையம் போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.

Updated On : 10 ஜூன் 2026, 5:38 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

பள்ளிபாளையம், திருச்செங்கோடு, குமாரபாளையம் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய தலைமறைவு குற்றவாளிகள் இருவரை பள்ளிபாளையம் போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.

பள்ளிபாளையத்தைச் சோ்ந்த உதய மூா்த்தி (36) மீது காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் நீதிமன்ற ஜாமீனில் வெளியே வந்த உதயமூா்த்தி, நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளாா்.

இந்த நிலையில், பள்ளிபாளையம் போலீஸாா் மதுரைக்கு சென்று மதுரையில் இருந்த உதயமூா்த்தியைக் கைது செய்து குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

Advertisement

Advertisement

இதேபோல பலாத்கார வழக்கில் கடந்த 2023 இல் கைது செய்யப்பட்ட பள்ளிபாளையம் காடச்சநல்லூரைச் சோ்ந்த உதயசூரியன் (67) ஜாமீனில் வெளியே வந்தாா். அதன்பிறகு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தாா்.

இதையடுத்து, காடச்சநல்லூா் பகுதியில் தலைமைறைவாக இருந்த உதயசூரி யனை, பள்ளிபாளையம் போலீஸாா் கைது செய்து நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments