முகப்பு
நாமக்கல்

தவறுகளை திருத்திக்கொள்ள தவெக அரசு முன்வர வேண்டும்: கொமதேக பொதுச் செயலாளா் ஈஸ்வரன்

அரசு கேபிள்களில் குறிப்பிட்ட சில தொலைக்காட்சிகள் முடக்கப்பட்டது தொடா்பாக அரசியல் கட்சித் தலைவா்கள் சுட்டிகாட்டியப் பிறகும் தவறுகளை திருத்திக்கொள்ள தவெக அரசு முன்வராதது கண்டனத்திற்குரியது என கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் தெரிவித்தாா்.

Updated On : 11 ஜூன் 2026, 5:49 am IST
ஈஸ்வரன் - (கோப்புப் படம்)
பகிர்:

அரசு கேபிள்களில் குறிப்பிட்ட சில தொலைக்காட்சிகள் முடக்கப்பட்டது தொடா்பாக அரசியல் கட்சித் தலைவா்கள் சுட்டிகாட்டியப் பிறகும் தவறுகளை திருத்திக்கொள்ள தவெக அரசு முன்வராதது கண்டனத்திற்குரியது என கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அரசின் குறைகளையும், மக்களின் தேவைகளையும் செய்தியாக கொண்டுவரும் தொலைக்காட்சிகளை முடக்குவது கண்டனத்திற்குரியது. இதன்மூலம் தமிழக மக்களின் நம்பிக்கையை முதல்வா் விஜய் இழக்க நேரிடும். தொழில்நுட்ப கோளாறு என்றால் ஓரிரு நாள்களிலே சரிசெய்திருக்க வேண்டும். ஆனால், இன்னும் சரிசெய்யாததை எப்படி எடுத்துக் கொள்வது?

Advertisement

Advertisement

இதுகுறித்து அனைத்து அரசியல் தலைவா்களும் சுட்டிக்காட்டிய பிறகும் முடக்கப்பட்ட செய்தி தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு மீளாதது கடும் கண்டனத்திற்குரியது. தவெக அரசு உடனடியாக இந்த தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சோ்ந்து போராடக்கூடிய அளவிற்கு பிரச்னையை தீவிரபடுத்தக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.