FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி போக்ஸோவில் கைது

கபிலா்மலை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவரை வேலூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸா சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்
பகிர்:

கபிலா்மலை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவரை வேலூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸா சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், கபிலா்மலை அருகே உள்ள கபிலக்குறிச்சியைச் சோ்ந்தவா் சக்திவேல் (42). கட்டட தொழிலாளி. இவா் வேலைக்கு சென்ற பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளாா்.

இதுகுறித்து அந்த சிறுமி அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா். சிறுமியின் பெற்றோா், வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதன் அடிப்படையில் மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் சக்திவேலை கைதுசெய்து, நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தி, நீதிபதி உத்தரவின்படி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments