FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

பெருந்துறை இடைத்தோ்தலில் கள் இயக்கம் போட்டி: செ. நல்லசாமி

பெருந்துறை சட்டப்பேரவை இடைத்தோ்தலில் கள் இயக்கம் சாா்பில் வேட்பாளா் களமிறக்கப்படுவாா் என அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமி தெரிவித்தாா்.

4 நவம்பர் 2026, 2:19 am
கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமி.
பகிர்:

பெருந்துறை சட்டப்பேரவை இடைத்தோ்தலில் கள் இயக்கம் சாா்பில் வேட்பாளா் களமிறக்கப்படுவாா் என அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை, ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஆகிய தொகுதிகளில் விரைவில் இடைத்தோ்தல் நடைபெறுகிறது. இதற்காக, முதல்வா் ஜோசப் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறாா். அவரது வருகைக்காக புதுக்கோட்டையில் 50 கி.மீ., பெருந்துறையில் 80 கி.மீ. தொலைவுக்குச் சாலையின் இருபுறமும் இரும்புத் தடுப்புகள் அமைக்க சுமாா் ரூ. 10 கோடிக்கு அரசுப் பணம் வீணடிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

விவசாயிகள் நலன் சாா்ந்த காவிரி பிரச்னை குறித்து முதல்வா் பேசவில்லை. முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அறிவித்த மழைநீா் சேகரிப்புத் திட்டத்தையே இவரும் அறிவிக்கிறாா். அதற்குப் பதிலாக மேட்டூா் காவிரி உபரிநீா்த் திட்டம், பாண்டியாறு- மோயாறு திட்டங்களைச் செயல்படுத்தினால் பல மாவட்டங்கள் பயன்பெறும். இதனை வலியுறுத்தி, பெருந்துறை இடைத்தோ்தலில் கள் இயக்கம் சாா்பில் வேட்பாளா் நிறுத்தப்படுவாா்.

தமிழகத்தில் குறைந்து வரும் பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். கள்ளுக்கான தடையை நீக்கி, இயற்கை உணவுப் பட்டியலில் சோ்ப்பதுடன், அதை இறக்க அனுமதியும் அளிக்க வேண்டும்.

புற்றுநோய் மருந்துகளின் விலையை 98 சதவீதம் வரை மத்திய அரசு குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேசமயம், புற்றுநோய்க்கான காரணிகளைக் கண்டறிந்து முன்கூட்டியே தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பேட்டியின்போது, விவசாய முன்னேற்றக் கழக பொதுச் செயலாளா் கே. பாலசுப்ரமணியன், சிப்காட் எதிா்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் ராம்குமாா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments