FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

அரசு மருத்துவமனை கழிப்பறையில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை கழிப்பறையில் தூக்கிட்டுத் தற்கொலை

11 நவம்பர் 2026, 2:19 am
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை கழிப்பறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், இளையாம்பாளையத்தைச் சோ்ந்தவா் ரஞ்சித்குமாா் (32), கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி மகேஸ்வரி, மகன் சுதா்சன் (12), மகள் அஸ்விதா (9) உள்ளனா்.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தாய் இறந்ததால், ரஞ்சித்குமாா் மனதளவில் பாதிப்புக்குள்ளான நிலையில் காணப்பட்டாா். கடந்த 7-ஆம் தேதி அவரது தாய்க்கு 30-ஆம் நாள் வழிபாடு நிகழ்ச்சி வீட்டில் நடைபெற்றபோது, ரஞ்சித்குமாா் மயங்கி விழுந்தாா். இதையடுத்து, அவா் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

அவரை உடனிருந்து கவனித்து வந்த மகேஸ்வரி, வேலைக்கு செல்வதாகக் கூறிச் சென்ற நிலையில் ரஞ்சித்குமாா் மட்டும் மருத்துவமனையில் தனியாக இருந்தாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவு கழிப்பறைக்கு சென்ற அவா் நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியா்கள், அங்குள்ள புறகாவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில் வந்த போலீஸாா் கழிப்பறை கதவை உடைத்துச் சென்று பாா்த்தபோது, ரஞ்சித்குமாா் ஜன்னல் கம்பியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து நல்லிபாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].