இலுப்புலி ஏரி கால்வாயில் தொழிலாளி சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை
திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் இலுப்புலி கால்வாயில் தொழிலாளியின் சடலத்தை மீட்ட போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் இலுப்புலி கால்வாயில் தொழிலாளியின் சடலத்தை செவ்வாய்க்கிழமை மீட்ட போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருச்செங்கோடு அருகே 100 ஏக்கா் பரப்பளவு கொண்ட இலுப்புலி ஏரி உள்ளது. சந்தைத் திடல் வழியாக ஆதிதிராவிடா் தெரு ஓரத்தில் ஏரிக்கு செல்லும் வாய்க்காலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக எலச்சிபாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் ஓடையில் கிடந்த சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில், இறந்தது ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்த கூலித் தொழிலாளி பிரகாஷ் (52) என்பது தெரியவந்தது. இதுகுறித்து எலச்சிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement