FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு

வேலகவுண்டம்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

13 நவம்பர் 2026, 10:03 pm
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

வேலகவுண்டம்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள இளநகா் பகுதியில் திருச்செங்கோடு - நாமக்கல் சாலையில் சுமாா் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி வியாழக்கிழமை இரவு சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மூதாட்டி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.

இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த மூதாட்டி படுகாயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா் மூதாட்டி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

தகவல் அறிந்து அங்கு வந்த வேலகவுண்டம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, மூதாட்டி குறித்தும், அவா் மீது மோதி நிற்காமல் சென்ற வாகனம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனா்.