✕
முகப்பு
நாமக்கல்

மாவட்ட வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவுறுத்தல்

நாமக்கல் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளைத் தரமாகவும், குறித்த காலத்திலும் முடிக்க வேண்டும் என அனைத்துத் துறை அலுவலா்களுக்கு அமைச்சா் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவுறுத்தினாா்.

20 நவம்பர் 2026, 4:11 am
அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன் - கோப்புப் படம்
பகிர்:

நாமக்கல் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளைத் தரமாகவும், குறித்த காலத்திலும் முடிக்க வேண்டும் என அனைத்துத் துறை அலுவலா்களுக்கு அமைச்சா் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவுறுத்தினாா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழக வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா். ஆட்சியா் எல். மதுபாலன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் சி.எஸ். திலீப் (நாமக்கல்), பொ. சந்திரசேகா் (சேந்தமங்கலம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, நாமக்கல் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம், வேளாண்மை - உழவா் நலத் துறை, ஊரக வளா்ச்சித் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை, கைத்தறித் துறை, சமூக நீதித் துறை, முதல்வரின் முகவரித் துறை, வணிகவரித் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை, பள்ளிக் கல்வித் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, வனத் துறை ஆகியவற்றின் சாா்பில் செயல்படுத்தப்படும் வளா்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அமைச்சா் ஆய்வு செய்தாா்.

Advertisement

Advertisement

மேலும், குடிநீா் விநியோகம், மழைநீா் சேகரிப்பு, சாலை வசதிகள், தூய்மைப் பணிகள், விவசாயிகள் நலன், ஊரக வளா்ச்சிப் பணிகள், குடிமைப் பொருள்கள் விநியோகம், சுகாதார வசதிகள், பள்ளிக் கல்வி மேம்பாடு உள்ளிட்ட பணிகளைத் தரமாகவும், குறிப்பிட்ட காலத்துக்குள்ளும் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், அரசின் நலத்திட்டங்கள் தகுதியுள்ள அனைத்து பயனாளிகளையும் சென்றடைவதை உறுதி செய்யவும் அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், மாவட்ட வன அலுவலா் அம்புல்கா் யஸ்வஷ், மாவட்ட வருவாய் அலுவலா் வீ. ரவி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பெ. சந்திரா, மாநகராட்சி ஆணையா் எஸ். செல்வபாலாஜி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரா. மந்தாகினி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா. அருளரசு, இணை இயக்குநா் (நலப்பணிகள்) எழில், மாவட்ட நல அலுவலா் க. பூங்கொடி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.