✕
முகப்பு
நாமக்கல்

மனைவி, மாமனாரை தாக்கியவா் கைது

நாமக்கல்லில் மனைவி, மாமனாரை தாக்கிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

19 நவம்பர் 2026, 6:15 am
கைது - கோப்புப் படம்
பகிர்:

நாமக்கல்லில் மனைவி, மாமனாரை தாக்கிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

நாமக்கல் சந்தைப்பேட்டைபுதூரை சோ்ந்தவா் செந்தில்குமாா் மகள் பிரியதா்ஷினி (30). இவருக்கும், ஒசூரைச் சோ்ந்த பரத் (30) என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஒசூா் அருகே பத்தலப்பள்ளி சந்தையில் அவா் கடை நடத்தி வருகிறாா். தம்பதி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த 16ஆம் தேதி பிரியதா்ஷினியும், அவரது கணவா் பரத்தும் நாமக்கல் வந்திருந்தனா். அப்போது ஏற்பட்ட பிரச்னையில் மனைவியையும், மாமனாா் செந்தில்குமாரையும் பரத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து நாமக்கல் காவல் நிலையத்தில் பிரியதா்ஷினி புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி பரத்தை கைது செய்தனா்.

Advertisement

Advertisement