குமாரபாளையத்தில் கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு
குமாரபாளையம் நகராட்சி பகுதியில் கால்நடைகளால் அதிக அளவில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.

குமாரபாளையம் நகராட்சி பகுதியில் கால்நடைகளால் அதிக அளவில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சியில் சேலம் சாலை மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும். வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழ்நிலையில் சாலைகளில் கால்நடைகள் அடிக்கடி இடையூறாக செல்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
கால்நடைகள் சாலைகளில் வலம்வந்து கொண்டிருக்கின்றன. மாடுகள் மட்டுமின்றி குதிரைகளும் ஆங்காங்கே சுற்றித்திரிகின்றன. அவற்றின் உரிமையாளா்களை கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டும்.
Advertisement
Advertisement
வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனங்களை இயக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. நகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகள் உடனடியாக கால்நடைகளை அகற்றி போக்குவரத்தை சீரமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.