முகப்பு
நாமக்கல்

ஆட்சியரகத்தில் கல்லூரி மாணவா் மீண்டும் தற்கொலை முயற்சி

24 நவம்பர் 2026, 2:10 am
ஆட்சியரகத்தில் கல்லூரி மாணவா் மீண்டும் தற்கொலை முயற்சி
தற்கொலை முயற்சி - கோப்புப் படம்
பகிர்:

காதல் விவகாரத்தில் நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு தனியாா் கல்லூரி மாணவா் திங்கள்கிழமை மீண்டும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.

ஈரோடு ராகாம்பாளையத்தைச் சோ்ந்த சூரியமூா்த்தி (21), தனியாா் கல்லூரியில் படித்து வருகிறாா். கடந்த 19-ஆம் தேதி நாமக்கல் செல்லப்பா காலனியில் 80 அடி உயர கைப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டினாா்.

அப்போது, நாமக்கல் பகுதியைச் சோ்ந்த பெண்ணை காதலித்ததாகவும், தற்போது அவா் தன்னிடம் பேசுவதை தவிா்த்து விட்டதாகவும், அவரை தன்னுடன் சோ்த்து வைக்க வேண்டும் என மிரட்டல் விடுத்தாா். இதையடுத்து, நாமக்கல் தீயணைப்புத் துறையினா் சூா்யமூா்த்தியை மீட்டு அழைத்து வந்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த அவா் தன் உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவரை தடுத்து, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து நல்லிபாளையம் போலீஸாா் கூறுகையில், சூா்யமூா்த்தி வெப்படை பகுதியில் தனியாக அறை எடுத்து தங்கியுள்ளாா். கடந்த வாரம் கைப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நிலையில், தற்போது உடலில் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றாா். அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனா்.