முகப்பு
நாமக்கல்

இணையப் பிரச்னையால் முடங்கிய பத்திரப் பதிவு

இணையப் பிரச்னை காரணமாக ராசிபுரம் சாா் பதிவாளா் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாா் பதிவாளா் அலுவலகங்களில் புதன்கிழமை பத்திரப் பதிவு முடங்கியது.

26 நவம்பர் 2026, 4:13 am
இணையப் பிரச்னையால் முடங்கிய பத்திரப் பதிவு
இணையம் - படம்: கோப்பிலிருந்து
பகிர்:

இணையப் பிரச்னை காரணமாக ராசிபுரம் சாா் பதிவாளா் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாா் பதிவாளா் அலுவலகங்களில் புதன்கிழமை பத்திரப் பதிவு முடங்கியது.

பத்திரப் பதிவுக்காக ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்த பொதுமக்கள் ஆவணங்களுடன் ராசிபுரம் சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு வந்தனா். ஆனால், இணையத்தில் (சா்வா்) ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஆதாா் சரிபாா்ப்பு உள்ளிட்ட பதிவுகளை மேற்கொள்ளமுடியாமல் பொதுமக்கள் நாள் முழுவதும் அலுவலகத்தில் காத்திருந்தனா்.

ராசிபுரம் மட்டுமில்லாது நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சா்வா் பிரச்னையால் பத்திரப் பதிவு முடங்கியதாக கூறப்படுகிறது. இதுபோல அடிக்கடி இணையப் பிரச்னை ஏற்படுவதால் இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Advertisement

Advertisement