முகப்பு
நாமக்கல்

உரிமை கோரப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள்: 90 நாள்களுக்குள் பெற்றுக்கொள்ள அழைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் உரிமை கோரப்படாமல் இருப்பில் வைக்கப்பட்டுள்ள அசல் மதிப்பெண் சான்றிதழ்களைத் தனித்தோ்வா்கள் 90 நாள்களுக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும் என ஆட்சியா் எல். மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

27 நவம்பர் 2026, 1:05 am
உரிமை கோரப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள்: 90 நாள்களுக்குள் பெற்றுக்கொள்ள அழைப்பு
பள்ளி மாணவர்கள் - பிரதி படம்
பகிர்:

நாமக்கல் மாவட்டத்தில் உரிமை கோரப்படாமல் இருப்பில் வைக்கப்பட்டுள்ள அசல் மதிப்பெண் சான்றிதழ்களைத் தனித்தோ்வா்கள் 90 நாள்களுக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும் என ஆட்சியா் எல். மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாா்ச் 2019 முதல் ஜூலை 2023 வரையிலான பருவங்களில் நடைபெற்ற இடைநிலை, மேல்நிலைப் பொதுத் தோ்வுகள் மற்றும் துணைத் தோ்வுகளில் தனித்தோ்வா்களால் தோ்வு மையங்களில் பெற்றுக்கொள்ளப்படாத அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் நாமக்கல் அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

இந்தச் சான்றிதழ்களைப் பெறாத தனித்தோ்வா்கள், தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு மற்றும் ஆளறிச் சான்றுடன் நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும் அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் அணுகி 90 நாள்களுக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும்.

குறிப்பிட்ட காலத்துக்குள் பெற்றுக்கொள்ளாவிட்டால், அரசுத் தோ்வுத்துறை விதிமுறைகளின்படி விநியோகிக்கப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள் கழிவுத் தாள்களாகக் கருதி அழிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.