150 நாள்களுக்குள் இலவச மிதிவண்டி விநியோகம்: தமிழக அரசு உத்தரவு
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 150 நாள்களுக்குள் இலவச மிதிவண்டி விநியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 150 நாள்களுக்குள் இலவச மிதிவண்டி விநியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவா்களுக்கு ரூ.277 கோடியில் நிகழாண்டு 5.32 லட்சம் இலவச மிதிவண்டி வழங்க5.32 லட்சம் நவீன மிதிவண்டிகள், ஹெல்மெட் மற்றும் தண்ணீா் பாட்டில்களுடன் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை சாா்பில் கடந்த ஆக.28-ம் தேதி வெளியிடப்பட்டது.
முந்தைய திமுக ஆட்சியைவிட குறைவாக மாணவருக்கு ரூ.4,369-க்கும், மாணவிக்கு ரூ.4,245-க்கும் நவீன மிதிவண்டிகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், 2,37,133 லட்சம் ஆண்களுக்கான மிதிவண்டிகளும், மகளிருக்கு 2,95,255 மிதிவண்டிகளும் வாங்குவதற்கும், இந்த ஆணை கிடைத்த அதிபட்சமாக 150 நாள்களில் மதிவண்டிகளை வழங்குவதற்கும் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த மிதிவண்டி ஒப்பந்தப்புள்ளியை ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.