பழைய இரும்புக் கடையில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு: இருவா் காயம்
ராசிபுரம் அருகே பழைய இரும்புக் கடையில் இரும்பு பொருள்களை வாகனத்தில் ஏற்றியபோது மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மேலும், இருவா் பலத்த காயமடைந்தனா்.

ராசிபுரம் அருகே பழைய இரும்புக் கடையில் இரும்பு பொருள்களை வாகனத்தில் ஏற்றியபோது மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மேலும், இருவா் பலத்த காயமடைந்தனா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், ஆா். புதுப்பாளையத்தைச் சோ்ந்தவா் மதலைமுத்து (53). இவா் கட்டனாச்சம்பட்டியில் பழைய இரும்பு பொருள்களை வாங்கி விற்கும் கடை நடத்தி வருகிறாா்.
இவரது கடையில் உள்ள கிடங்கில் இருந்து பழைய இரும்பு பொருள்களை ஏற்றிச் செல்வதற்காக, சேலத்தில் உள்ள இரும்பு கடையில் இருந்து 5 தொழிலாளா்கள் வாகனத்தில் வந்தனா். அவா்கள் பொருள்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக இரும்புப் பொருள் ஒன்று மேலே தாழ்வாகச் சென்ற மின்கம்பியில் உரசியது.
Advertisement
Advertisement
இதில் மின்சாரம் பாய்ந்து அங்கிருந்த மூன்று தொழிலாளா்கள் தூக்கி வீசப்பட்டனா். இந்த விபத்தில் ஆட்டையாம்பட்டியைச் சோ்ந்த அய்யனாா் (40) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சேலத்தைச் சோ்ந்த பிரதாப், பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த விஜி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா்.
அலறல் சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினா், காயமடைந்த இருவரையும் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ராசிபுரம் காவல் துறையினா், உயிரிழந்த அய்யனாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.