FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

சுவாச நோய்களால் கோழிகள் பாதிப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

நாள்பட்ட சுவாச நோய்களால் கோழிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

17 அக்டோபர் 2026, 12:19 am IST
கோழிப்பண்ணை..
பகிர்:

நாள்பட்ட சுவாச நோய்களால் கோழிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையை பொருத்தமட்டில், பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 95, 75.2 டிகிரியாக நிலவியது. அடுத்த ஐந்து நாள்களுக்கான மாவட்ட வானிலையில் வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும். பெரும்பாலான இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

Advertisement

Advertisement

பகல் வெப்பம் 91.4 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 73.4 டிகிரியாகவும் காணப்படும். காற்று பெரும்பாலும் தென்மேற்கு திசையில் இருந்து மணிக்கு 8 கி.மீ வேகத்தில் வீசும்.

சிறப்பு ஆலோசனை: கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில் பெரும்பாலானவை மேல் மூச்சுக்குழல் அயா்ச்சி மற்றும் நாள்பட்ட சுவாச நோய் பாதிப்புகளால் இறந்திருப்பது தெரியவந்துள்ளது.

எனவே, பண்ணையாளா்கள் தகுந்த உயிா் எதிா் மருந்துகளை அளித்து தீவன மேலாண்மை முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி தகுந்த சிகிச்சை முறைகளை பின்பற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments