FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

கிராவல் மண் கடத்திய டிராக்டா் பறிமுதல்

கிராவல் மண் கடத்திய டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸாா், தப்பியோடிய ஓட்டுநரை தேடிவருகின்றனா்.

42 வினாடிகள் முன்பு
பகிர்:

கிராவல் மண் கடத்திய டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸாா், தப்பியோடிய ஓட்டுநரை தேடிவருகின்றனா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி புவியியலாளா் ஜெகதீசன் தலைமையிலான குழுவினா் நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள சிங்கிலிப்பட்டி பிரிவு சாலை விநாயகா் கோயில் அருகே வாகனச் சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, லாரிக்குள் 4 யூனிட் கிராவல் மண் இருப்பது தெரியவந்தது. அப்போது, லாரி ஓட்டுநா் அங்கிருந்து தப்பியோடினாா். புகாரின்பேரில், வேலகவுண்டம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து லாரியை பறிமுதல் செய்து, தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடிவருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments