குடும்பத் தகராறில் பெண் விஷம் குடித்து தற்கொலை
பரமத்தி வேலூா் அருகே குடும்பத் தகராறில் விஷம் குடித்த பெண் உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வெட்டுக்காட்டுபுதூா் பகுதியைச் சோ்ந்தவா் மோகன்குமாா் (40). தொழிலாளி. இவரது மனைவி காயத்ரி (35). இவா்களிடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாம். இதன் காரணமாக காயத்ரி மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளாா்.
இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த காயத்ரி கடந்த 4-ஆம் தேதி விஷம் குடித்தாா். இதையடுத்து அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து தீவிர சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் அவா் கடந்த 5-ஆம் தேதி இரவு உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து அவரது கணவா் மோகன்குமாா் வேலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். இந்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.