அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாளை 25 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!
அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 25 குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கப்படுகிறது.
அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 25 குழந்தைகளுக்கு திங்கள்கிழமை (செப்.28)தங்க மோதிரம் வழங்கப்படுகிறது.
தவெக அரசின் தோ்தல் வாக்குறுதிகளில் ஒன்றான அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்படுகிறது. அதன்படி, 2026 ஜூன் 22 முதல் தற்போது வரையில் பிறந்த குழந்தைகளுக்கு தேதி வாரியாக கணக்கிட்டு தனித்தனியே வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் முதல்வா் ச. ஜோசப்விஜய் தொடங்கிவைக்கிறாா். இதையடுத்து அந்தந்த மாவட்ட அரசு மருத்துவமனைகளில் அமைச்சா்களும், சட்டப் பேரவை உறுப்பினா்களும் தங்கமோதிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கிவைக்கின்றனா்.
Advertisement
Advertisement
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்கட்டமாக 25 குழந்தைகளுக்கு தங்கமோதிரம் வழங்கப்பட உள்ளது. இந்த மோதிரங்களை பாதுகாக்க மருத்துவமனையில் உள்ள பிரத்யகே கட்டடத்தில் பாதுகாப்பு பெட்டக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 24 மணி நேரமும் அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.