FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கன்னந்தேரி அரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கன்னந்தேரி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

24 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

கன்னந்தேரி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் பெற்றோர் -ஆசிரியர் கழகத் தலைவர் எம்.ராஜு தலைமை வகித்து, அறிவியல் கண்காட்சியை தொடக்கிவைத்தார்.

தலைமையாசிரியர் க.சந்திரசேகர் வரவேற்றார். மகுடஞ்சாவடி வட்டார வள மேற்பார்வையாளர் விஜயலட்சுமி கண்காட்சியைப் பார்வையிட்டார்.

Advertisement

Advertisement

சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் வாகனம், சூரிய ஒளியில் இயங்கும் கிராம விளக்குகள், சொட்டு நீர்ப்பாசனம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மாதிரிகளை மாணவ, மாணவியர் காட்சிக்கு வைத்திருந்தனர்.

ஆசிரியர்கள் ஆர்.ஜெயக்குமார், ம.அமலோற்பவமேரி, அ.சோபியா, சங்கீதா, ஜெயசுதா, சமூக ஆர்வலர்கள் ரத்தினசாமி, எம்.சுப்பு, கலைச்செல்வன், சண்முகம், ரங்கசாமி, தவச்செல்வி மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments