FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

காவிரியில் கூடுதல் தண்ணீர் திறப்பு: பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் நேரில் ஆய்வு

மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் கூடுதலான அளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில்,  காவிரிக் கரையோரப் பகுதியில்

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் கூடுதலான அளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில்,  காவிரிக் கரையோரப் பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து, மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராமதாஸ் புதன்கிழமை நேரில் ஆய்வுசெய்தார். 
கர்நாடகம், கேரள மாநிலங்களில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் தொடர் கன மழையால்,  காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  கூடுதல் அளவிலான நீர் வரத்தால் நிகழ்வாண்டில் மேட்டூர் அணை இரண்டாவது முறையாக முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.
கடந்த சில நாட்களாக சற்றே குறைவடைந்த நீர் வரத்து,  செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில்,  அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கூடுதல் அளவிலான உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.  இதனால் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள காவிரிக் கரைகளில் வெள்ள நீர் அபாய கட்டத்தைத் தாண்டி பாய்வதால்,  அப் பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாதுகாப்பு முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ப்பட்டு வருகின்றன. 
எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பகுதியில் உள்ள காவிரிக்கரைப் பகுதியினை புதன்கிழமை மாலை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராமதாஸ்,  அங்கு நடைபெற்றுவரும் பாதுகாப்பு  முன்னேற்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.  
மேலும், அப் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும்படியும்,  கரையோரப் பகுதியில் வழக்கமாக மக்கள் இறங்கிக் குளிக்கும் இடங்களில் தடுப்புகள் அமைத்திடவும்,  பூலாம்பட்டி, கூடுக்கல், குப்பனூர், பனங்காடு உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினைர்  தொடர்ந்து கண்காணித்திடவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். 
ஆய்வின்போது, சங்ககிரி கோட்டாட்சியர் ராமதுரைமுருகன்,  எடப்பாடி வட்டாட்சியர் கேசவன் உள்ளிட்ட வருவாய்த் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments