FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சர்க்கரை நோய் விழிப்புணர்வு மாரத்தான்

தாரமங்கலத்தில் உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு மினி மாரத்தான்போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

தாரமங்கலத்தில் உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு மினி மாரத்தான்போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
தாரமங்கலத்தில் அப்துல் கலாம் அக்னி சிறகுகள் அறக்கட்டளை சார்பில், உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாகவும் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், தடகள வீரர் வீராங்கனையர் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் ஆடவர் மற்றும் பெண்கள் பிரிவில் சேலம், தருமபுரி, ஓமலூர், தாரமங்கலம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 10 பேர் முதல் மூன்று இடங்களை பெற்றனர். இவர்களுக்கு பரிசும், சான்றுகளும் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, மினி மாரத்தான் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments