மூப்பனார் பிறந்தநாள் விழா
சேலம் மேற்கு மாவட்ட தமாகா சார்பில் ஜி.கே.மூப்பனாரின் 88-ஆவது பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
சேலம் மேற்கு மாவட்ட தமாகா சார்பில் ஜி.கே.மூப்பனாரின் 88-ஆவது பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
தீவட்டிப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜி.கே.மூப்பனாரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனையடுத்து, பொதுமக்களுக்கு வேட்டி-சேலைகளை மேற்கு மாவட்டத் தலைவர் கரு.வெ.சுசீந்திரகுமார் வழங்கினார். மேலும், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கப்பட்டது.
காடையாம்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதேபோன்று, கருப்பூர், தாரமங்கலம் பகுதியிலும் விழாக்கள் நடத்தப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், வட்டாரத் தலைவர்கள் ஓ.சி.ராஜேந்திரன், சேதுராமன், இளைஞர் பிரிவு மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.ரகுநந்தகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆத்தூரில்... ஆத்தூரில் சேலம் கிழக்கு மாவட்ட த.மா.கா. சார்பில் ஜி.கே.மூப்பனார் பிறந்த நாளையொட்டி அவரது உருவப் படத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் டி.காளிமுத்து தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் துணைத் தலைவர்கள் வீரமுத்து, தெடாவூர் ஆறுமுகம், மருதமுத்து, அம்மம்பாளையம் ராஜேந்திரன், மாவட்ட நிர்வாகிகள் பழனிராஜா, முருகன், மணிரத்தினம், தேவேந்திரன், மகாலிங்கம், மோகன், ரங்கசாமி, விவசாய அணி சீட்ஸ்ரவி, மாணவரணி கலைமணி, எஸ்சி,எஸ்டி அணி சரவணன், மகளிரணி சுமதி, நரசிங்கபுரம் நகர தலைவர் வேலு, மணிக்குமார், ரங்கதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.