FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மேட்டூரில் தடை செய்யப்பட்ட மீன்வலைகள், பரிசல்கள் பறிமுதல்

மேட்டூர் நீர்த்தேக்கத்தில் பயன்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட மீன்வலைகள், பரிசல்களை மீன்வளத்துறையினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

மேட்டூர் நீர்த்தேக்கத்தில் பயன்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட மீன்வலைகள், பரிசல்களை மீன்வளத்துறையினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
 மேட்டூர் நீர்த்தேக்கப் பகுதிகளான அடிப்பாலாறு, சுண்டக்கல், கோட்டையூர், செட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மேட்டூர் மீன்வளத்துறை உதவி இயக்குநர் வெங்கடாசலம், மீன்வளத்துறை ஆய்வாளர் பெ.முத்துவிநாயகம், சார் -ஆய்வாளர் கவிதா மற்றும் மீன்வளப்பாதுகாவலர்கள் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மீன்வளத்துறையால் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மேட்டூர் நீர்த்தேக்கத்தில் மீன்வளத்துறையால் இருப்பு செய்யப்பட்ட கட்லா, ரோகு, மிர்கால் வகை மீன்குஞ்சுகளைப் பிடித்து மீன்வளத்தை அழிக்கும் பணியில் சிலர் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து இரண்டு பரிசல்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட வலைகளை மீன்வளத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
 மேலும்அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments