கிராமிய அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்தம்
அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமிய அஞ்சல் ஊழியர்கள்
அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமிய அஞ்சல் ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தம் மேற்கொண்டனர்.
இந்திய தபால் துறையில் பணியாற்றி வரும் கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு கமலேஷ் சந்திரா கமிட்டி பரிந்துரையின்படி 1.1.2016 தேதியிட்டு ஊதிய உயர்வு அமல்படுத்திடவேண்டும்.
ஒரு நபர் மட்டும் பணிபுரியும் கிளை தபால் அலுவலகத்தில் இன்னொரு கிராமிய அஞ்சல் ஊழியரை பணியமர்த்த வேண்டும்.
கிளை அஞ்சலகங்களின் வேலை நேரத்தை 8 மணி நேரமாக உயர்த்தி கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர் அந்தஸ்தை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரையில் சேலம் மேற்கு, கிழக்கு கோட்டங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். இதனால் தபால் நிலையங்கள் பூட்டப்பட்டு, தபால் பட்டுவாடா செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. சேலம் கிழக்குக் கோட்ட அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கிழக்குக் கோட்டத் தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ரமேஷ், பாலமுருகன், சின்னதுரை உள்பட பலர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.