பத்மவாணி மகளிர் கல்லூரியில் 22-இல் வேலைவாய்ப்பு முகாம்
ஓமலூர் அருகே கோட்டகவுண்டம்பட்டியில் இருக்கும் பத்மவாணி மகளிர் கல்லூரியில் வரும் 22-ஆம் தேதி
ஓமலூர் அருகே கோட்டகவுண்டம்பட்டியில் இருக்கும் பத்மவாணி மகளிர் கல்லூரியில் வரும் 22-ஆம் தேதி சனிக்கிழமை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் டிசம்பர் 22-ஆம் தேதி சனிக்கிழமை அன்று சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இந்த முகாமில் ஹெச்.சி.எல், டெக் மகேந்திரா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப மற்றும் பிற நிறுவனங்கள் பங்குபெற்று ஆள்களைத் தேர்வு செய்ய இருக்கிறார்கள்.
தேர்வு பெறும் நபர்கள் ரூ. 2 முதல் 6 லட்சம் வரை வருட வருமானம் பெறுவதற்கான வாய்ப்பை பெறலாம்.
இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நபர்கள் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் பி.இ., பி.ஏ., பி.பி.ஏ., பி.காம்., பி.எஸ்.சி., எம்.பி.ஏ., எம்.இ., எம்.காம்., எம்.எஸ்.சி., டிப்ளமோ மற்றும் ஐ.டி.ஐ பயின்று முடித்தவர்களாக இருக்க வேண்டும். இந்த முகாமில் ஆண், பெண் இருபாலரும் தங்கள் படிப்பு சான்றிதழ்கள் மற்றும் சுய விவரத்துடன் பங்கு பெறலாம்.
இதற்கான பதிவு கட்டணம் ரு. 200 ஆகும். இதற்கான பதிவு 22-ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கும். மேலும் விவரங்களுக்கு 7667690910, 7397736363 மற்றும் 9952661602 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.