மேட்டூர் அனல் மின் நிலையம் வந்த சரக்கு ரயில் நடுவழியில் நின்றது
மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயில் நடுவழியில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயில் நடுவழியில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறன்கொண்ட நான்கு அலகுகளும், 600 மெகாவாட் திறன்கொண்ட ஒரு அலகும் செயல்பட்டு வருகின்றன. அதுவும் இன்றி இரண்டு தனியார் ஆலைகளின் அனல் மின் நிலையங்களுக்கும் ரயில் மூலம் நிலக்கரி கொண்டு வரப்படுகின்றன. மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு நிலக்கரி பாரம் ஏற்றிய சரக்கு ரயில் செவ்வாய்க்கிழமை வந்துகொண்டிருந்தது. மேட்டூர் அருகே புதுச்சாம்பள்ளிக்கு வந்தபோது ரயில் பெட்டிகளின் இணைப்பு கெக்கி கழன்றதால் 15 ரயில் பெட்டிகள் நடுவழியில் நின்றன.
முன்னால் சென்ற இன்ஜின் மற்ற பெட்டிகளுடன் சென்றுவிட்டது. இதனால் புதுச்சாம்பள்ளியில் ரயில்வே கேட் திறக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். சரக்கு ரயில் பெட்டியின் பின்னால் இருந்த இன்ஜின் ஓட்டுநர் வயர்லஸ் மூலம் தகவல் தந்ததால் மேட்டூர் அனல் மின் நிலையம் சென்ற இன்ஜின் மீண்டும் வந்து இடையில் நின்ற பெட்டிகளை இழுத்துச் சென்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.