FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

சேலம் மாவட்டத்தில் ஏழை பெண்கள் 44,975 பேருக்கு தாலிக்கு தங்கம் வழங்கல்

சேலம் மாவட்டத்தில் சமூக நலத்துறையின் மூலம் கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் 44,975 ஏழை பெண்களுக்கு ரூ.159 கோடியே

Updated On : 31 டிசம்பர் 2018, 10:05 am IST
பகிர்:

சேலம் மாவட்டத்தில் சமூக நலத்துறையின் மூலம் கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் 44,975 ஏழை பெண்களுக்கு ரூ.159 கோடியே 93 லட்சம் திருமண நிதியுதவியுடன் 205 கிலோ தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு மகளிரின் பாதுகாப்பிற்கும், சமூக பொருளாதார அதிகார பகிர்விற்கும் முதலிடத்தை அளிப்பதுடன், பண்பாட்டுத் தேவையை அங்கீகரிக்கும் விதமாக மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணம் நிதியுதவித் திட்டம் என ஐந்து முக்கிய திருமண நிதியுதவித் திட்டங்களின் கீழ் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துகிறது. இதனால் பெண்கள் மற்றும் ஏழைப் பெற்றோர்களின் கண்ணியமான நிலையினை உறுதி செய்வதுடன் பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிக்கின்றது.
10ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்த பெண்களுக்கு திருமாங்கல்யம் செய்வதற்கு  4 கிராம் தங்க நாணயத்துடன் ரூ.25,000 மற்றும் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு படித்த பெண்களுக்கு 4 கிராம் தங்க நாணயத்துடன ரூ.50,000 நிதியுதவியாக அரசால் வழங்கப்பட்டு வந்தது. இதனால், இத்திட்டத்தின் மூலம் 55 சதவிகித பெண்கள் ஆர்வத்துடன் உயர்கல்வி கற்பது ஊக்குவிக்கப்பட்டுள்ளது. 
மேலும், இத்திட்டங்கள் குறிப்பாக ஏழ்மை நிலையிலுள்ள பெற்றோர்களின் மகள்கள்,  ஆதரவற்ற பெண்கள், கலப்புத் திருமணம் புரிந்த தம்பதியர், விதவையரின் மகள் மற்றும் மறுமணம் புரியும் விதவையர் ஆகியோருக்காக செயல்படுத்தப்படுகிறது.
கடந்த 2016 மே 23 ஆம் தேதி முதல் திருமாங்கல்யம் செய்வதற்கு வழங்கப்படும் தங்க நாணயத்தின் அளவானது 8 கிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.தேசிய அளவில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாகத் திகழ செய்யும் நோக்கத்துடன் சமூக நலத்துறையின் மூலம் குழந்தைகள், பெண்கள், மூத்தகுடிமக்கள் மற்றும் சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களின் பொருளாதார முன்னேற்றம்,  சமநிலை, சமூக உரிமைகள் மற்றும் சமூக நீதி பெற்று பயன்பெறும் வகையில் சிறப்பான சேவைகள் வழங்கப்பட்டுகிறது.
சேலம் மாவட்டத்தில் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் மொத்தம் 38,575 ஏழை பெண்களுக்கு ரூ.136 கோடியே 3 லட்சம் திருமண நிதியுதவியும், தலா 4 கிராம் தங்கம் வீதம் 1,54,300 கிராம் (19,287.50 பவுன்) (154.30 கிலோ) தங்கமும் வழங்கப்பட்டுள்ளது. 
ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு 8 கிராம் தங்கமாக உயர்த்தி வழங்கும் திட்டத்தின் கீழ் மொத்தம் 6,400 ஏழை பெண்களுக்கு ரூ.23 கோடியே 90 லட்சம் திருமண நிதியுதவியும், தலா 8 கிராம் தங்கம் வீதம் 51,200 கிராம் (6,400 பவுன்) (51.20 கிலோ) தங்கம் வழங்கப்பட்டுள்ளது. 
இத்திட்டத்தில் மொத்தம் 8 ஆண்டுகளில் சேலம் மாவட்டத்தில் மட்டும் 44,975 ஏழை பெண்களுக்கு ரூ.159 கோடியே 93 லட்சம் திருமண நிதியுதவியுடன் 2,05,500 கிராம் (25,687.50 பவுன்) (205.50 கிலோ) தங்கம் வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments