FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பாட்னாவில் தேஜ் பிரதாப் யாதவ் கைது!

பட்னாவில் முன்னாள் அமைச்சர் தேஜ் பிரதாப் யாதவ் கைது செய்யப்பட்டிருப்பது பற்றி...

Updated On : 26 ஜூலை 2026, 3:30 pm IST
தேஜ் பிரதாப் யாதவ் - கோப்புப்படம்.
பகிர்:

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியதாக கூறி, முன்னாள் அமைச்சர் தேஜ் பிரதாப் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் குற்றஞ்சாட்டினார்.

இதுகுறித்து பாட்னாவில் அவரது வழக்கறிஞர் ஜெகன்னாத் சிங் இன்று அளித்த பேட்டியில், தேஜ் பிரதாப் யாதவ் மீதான முதல் தகவல் அறிக்கை ஜூலை 26ஆம் தேதிதான் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அவர் ஜூலை 25 மாலை சுமார் 7.30 மணியளவில் பாட்னாவில் உள்ள வணிக வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

பின்னர் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.15 மணியளவில் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, நீதிமன்றம் காவலில் வைக்க உத்தரவிட்டது. எனது கட்சிக்காரர் தற்போது பேயூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தேஜ் பிரதாப் யாதவுக்கு ஜாமீன் கோரி திங்கள்கிழமை நீதிமன்றத்தை அணுகவுள்ளோம் என்றார்.

Advertisement

Advertisement

போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு ஒரு நாளுக்கு முன்பே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இருப்பினும், யாதவின் வழக்கறிஞர் சுமத்தியுள்ள இந்தக் குற்றச்சாட்டு குறித்து போலீஸார் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.

முன்னதாக சனிக்கிழமை பாட்னாவில் நடைபெற்ற நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான போராட்டங்கள் தீவிரமடைவதற்கும், அதனால் சொத்து சேதம் ஏற்படுவதற்கும் தேஜ் பிரதாப் யாதவின் நடவடிக்கைகளே காரணம் என்று போலீஸார் குற்றம்சாட்டியிருந்தனர். ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன்தான் தேஜ் பிரதாப் யாதவ்.

இவர் அண்மையில் ஜன் சக்தி ஜனதா தளம் என்கிற கட்சியைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Former Bihar minister and Janshakti Janata Dal chief Tej Pratap Yadav was arrested for allegedly indulging in protests over the NEET paper leak in the state capital, his lawyer claimed on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments