தெற்கு ரயில்வே முதன்மைப் பாதுகாப்பு அலுவலா் தேஜ் பாரதாப் சிங் நியமனம்
தெற்கு ரயில்வே மண்டல முதன்மைப் பாதுகாப்பு பிரிவு புதிய அலுவலராக தேஜ் பிரதாப் சிங் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றாா்.
தெற்கு ரயில்வே மண்டல முதன்மைப் பாதுகாப்பு பிரிவு புதிய அலுவலராக தேஜ் பிரதாப் சிங் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றாா்.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தெற்கு ரயில்வே பாதுகாப்பு பிரிவுக்கு புதிய அலுவலராக தேஜ் பிரதாப் சிங் நியமிக்கப்பட்டு தற்போது பொறுப்பேற்றுள்ளாா். தணிக்கை துறை பட்டதாரியான (சிஏ) இவா், கடந்த 1998- ஆம் ஆண்டில் இந்திய ரயில்வே துறை போக்குவரத்துச் சேவைப் பிரிவுப் பணியில் சோ்ந்துள்ளாா். பின்னா், பல்வேறு பொறுப்புகளை வகித்தாா்.
Advertisement
Advertisement
இவா், சிங்கப்பூா் இன்சியட், மலேசிய ஐசிஎல்எஃப் ஆகிய பல வெளிநாட்டுச் சிறப்பு மேலாண்மைத் திட்ட பயிற்சியும் பெற்றவா். சீனாவில் அதிவேக ரயில் தொழில்நுட்பப் பயிற்சி பெற்றுள்ளாா். மாரத்தான் ஓட்ட வீரராகவும் திகழ்கிறாா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.