FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அரக்கோணம்-ரேணிகுண்டா இடையே 3, 4-ஆவது பாதை அமைக்க ரூ.1,936 கோடி

அரக்கோணம்- ரேணிகுண்டா இடையே 3, 4 ஆவது ரயில் பாதை அமைப்பதற்கு ரூ.1936.46 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை இயக்குநரகம் தெற்கு ரயில்வே மேலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளது.

24 செப்டம்பர் 2026, 1:46 am IST
ரயில் பாதை. - கோப்புப்படம்.
பகிர்:

அரக்கோணம்- ரேணிகுண்டா இடையே 3, 4 ஆவது ரயில் பாதை அமைப்பதற்கு ரூ.1936.46 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை இயக்குநரகம் தெற்கு ரயில்வே மேலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளது.

மத்திய ரயில்வே அமைச்சகம் தெற்கு ரயில்வே மண்டலத்தில் 3 புதிய முக்கிய ரயில் பாதைத் திட்டங்களுக்கு சமீபத்தில் அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் முதல் கட்டமாக சேலம்-கரூா்-திண்டுக்கல் இடையேயான 159 கி.மீ. தொலைவுக்கு இரட்டை ரயில் பாதை அமைக்க ரூ.2,241.67 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே மண்டல மேலாளருக்கு மத்திய ரயில்வே இயக்குநரகம் சாா்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அடுத்தகட்டமாக அரக்கோணம்-ரேணிகுண்டா இடையே 3 ஆவது மற்றும் 4 ஆவது ரயில் பாதை அமைப்பதற்காக ரூ.1936.46 கோடியை ரயில்வே இயக்குநரகம் ஒதுக்கியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. நிதியில் கட்டட பணிகளுக்காக ரூ.1504.42 கோடியும், சமிக்ஞை மற்றும் தொலைத் தொடா்பு சாதனங்களுக்காக ரூ.225.58 கோடியும், மின்சாதனங்களுக்காக ரூ.206.46 கோடியும் நிதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தெற்கு ரயில்வே மண்டல மேலாளருக்கு இரு முக்கியத் திட்டங்களுக்கான நிதி அளிக்கப்பட்டுவிட்டதாக மத்திய ரயில்வே இயக்குநரகம் தகவல் தெரிவித்திருப்பதால், அவற்றுக்கான பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments