காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட வெற்றி விழா பொதுக் கூட்டம்
தம்மம்பட்டியில் அதிமுக அரசின் காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட வெற்றி விழா பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
தம்மம்பட்டியில் அதிமுக அரசின் காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட வெற்றி விழா பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் ஆர்.இளங்கோவன் தலைமை வகித்தார். தலைவாசல் ஒன்றியச் செயலாளர்கள் பெரியசாமி, ராமசாமி, மாவட்ட அம்மா பேரவைத் துணைத் தலைவர் ஸ்ரீகுமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கெங்கவல்லி ஒன்றியச் செயலாளர் கூடமலை வி. ராஜா வரவேற்றார். தலைமைக் கழகப் பேச்சாளர் அன்புகரசு, கள்ளக்குறிச்சி எம்.பி. காமராஜ், கெங்கவல்லி எம்எல்ஏ மருதமுத்து ஆகியோர் பேசினர். அதைத் தொடர்ந்து தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது:
கடந்த 16 மாதத்தில் பல போராட்டங்களை சமாளித்தவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தமிழகத்தை அதிமுகதான் தொடர்ந்து ஆளும். நான்கு வழிச்சாலை அருகே இருந்ததால்தான், மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது என்றார். தம்மம்பட்டி பேரூர் செயலாளர் பொ. பாலசுப்ரமணியம் நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.