FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

நானியின் பாரடைஸ் திரைப்படத்தில் சிறப்பு நடனமாடும் கீர்த்தி சுரேஷ்?

நானியின் பாரடைஸ் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் இணையவுள்ளதாகத் தகவல்...

Updated On : 28 ஜூலை 2026, 5:08 pm IST
நானி, கீர்த்தி சுரேஷ்
பகிர்:

நடிகை கீர்த்தி சுரேஷ் பாரடைஸ் திரைப்படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் நானி தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக வியாபார ரீதியாகவும் பெரிய நட்சத்திர நடிகராக உருவெடுத்துள்ளார்.

நானி நடிப்பில் கடைசியாக வெளியான சரிபோத சனிவாரம், ஹிட் - 3 ஆகிய திரைப்படங்கள் வசூல் ரீதியாக ரூ. 100 கோடியைக் கடந்ததால் அவரது படங்களின் பட்ஜெட்டும் அதிகரித்து வருகின்றன.

Advertisement

Advertisement

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் தி பாரடைஸ் என்கிற படத்தில் நடிக்கிறார். இப்படம் ஆக்சன் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படம் மார்ச் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் தள்ளிச்சென்றது.

தற்போது, தி பாரடைஸ் திரைப்படம் வருகிற செப். 24 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இப்படத்தின் பாடலுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்பு நடனமாட உள்ளதாகக் கூறப்படுகிறது. ஸ்ரீகாந்த் ஒடேசா இயக்கத்தில் தசரா திரைப்படத்தில் நானி - கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Reports indicate that actress Keerthy Suresh has joined the film Paradise.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments