ஆசிரியர் தின விழா
வாழப்பாடி புதுப்பாளையத்தில் உள்ள இயங்கும் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு நிகழாண்டிற்கான காமராஜர் விருதை பள்ளிக் கல்வித்துறை வழங்கியுள்ளது.
வாழப்பாடி புதுப்பாளையத்தில் உள்ள இயங்கும் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு நிகழாண்டிற்கான காமராஜர் விருதை பள்ளிக் கல்வித்துறை வழங்கியுள்ளது.
இப் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளுக்கு பாராட்டு விழா மற்றும் ஆசிரியர் தின விழா, பள்ளி வளாகத்தில் புதன்கிழமை காலை நடைபெற்றது. இவ்விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியை ரஜினி தலைமை வகித்தார். உதவித் தலைமையாசிரியர் ஜெகதீசன் வரவேற்றார்.
வாழப்பாடி காவல் ஆய்வாளர் செல்வராஜ், நெஸ்ட் அறக்கட்டளை தலைவர், செயலாளர் ஜவஹர், புரவலர்கள் வடக்குக்காடு சிங்காரம், கல்கி கிருஷ்ணமூர்த்தி, சிங்கிபுரம் ராம்கோ சிமென்ட் கணக்குத்துறை மேலாளர் சுரேஷ்குமார், பணியாளர் துறை அலுவலர் மணிவேல் ஆகியோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவியரை பாராட்டி, பள்ளி வகுப்பறைகளுக்கு 4 மின் விசிறிகளை வழங்கினர். விழாவின் நிறைவாக தமிழாசிரியர் பழனிவேல் நன்றி கூறினார்.
ஆத்தூரில்...
அம்மம்பாளையம் ஜெய்வின்ஸ் அகாதெமி பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளர் எஸ்.இளவரசு தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மூத்த ஆசிரியர்கள், ஆசிரியைகளுக்கு பொன்னாடை போர்த்தி கெüரவித்தனர். இதில்
செயலாளர் இ.இளையராஜா, அன்புராணி இளவரசு, முதல்வர் கிறிஸ்டோபல் ஜெர்மி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.