சேலம் மாவட்ட நாடக நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு
சேலம் மாவட்ட நாடக நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் புதன்கிழமை பொறுப்பேற்றனர்.
சேலம் மாவட்ட நாடக நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் புதன்கிழமை பொறுப்பேற்றனர்.
சேலம் மாவட்ட நாடக நடிகர்கள் சங்கத் தேர்தல் நடைபெற்றது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.இதில் தலைவராக கே.அத்தியப்பன், துணைத் தலைவராக எம்.எல்.கண்ணன், செயலாளராக முன்னாள் மேயர் எஸ்.சௌண்டப்பன், துணைச் செயலாளராக ராஜசிகாமணி, பொருளாளராக தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. ஏ.பி.சக்திவேல், செயற்குழு உறுப்பினர்களாக நரேந்திரன், மனோகரன், சந்திரன், யுவராஜ், செபாஸ்டின், மாலா, விஜயகுமாரி, சரஸ்வதி ஆகியோர் உறுதி மொழி ஏற்று பொறுப்பேற்றுக் கொண்டனர். இதைத்தொடர்ந்து செயலாளர் எஸ்.சௌண்டப்பன், பொருளாளர் எம்.எல்.ஏ. ஏ.பி.சக்திவேல் கூறியது: சேலம் மாவட்ட நாடக நடிகர் சங்கத்தில் வீடு இல்லாத உறுப்பினர்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு ரூ.3 ஆயிரம் திருமண நிதி உதவி வழங்கப்படும். ஆண்டுதோறும் பொது மருத்துவ முகாம் நடத்தப்படும்.நாடகக் கலையை வலுப்படுத்தும் வகையில் சங்க உறுப்பினர்களுக்கும், வாரிசுகளுக்கும் வாய்ப்பாட்டு, மிருதங்கம், தபேலா, தவில், நாதஸ்வரம், கீ போர்டு போன்ற பயிற்சி வழங்கப்படும் என்றனர்.நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. ஏ.பி.சக்திவேல், முருகன் பாடல்களை பாடி பார்வையாளர்களை கவர்ந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.