FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பூத்தாழீஸ்வரா் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை

சங்ககிரியை அடுத்த அன்னதானப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பூத்தாலக்குட்டை, அருள்மிகு பூத்தாழீஸ்வரா் கோயிலில் அமாவாசையையொட்டி புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
சிறப்பு அலங்காரத்தில் பூத்தாழீஸ்வரா்.
பகிர்:

சங்ககிரியை அடுத்த அன்னதானப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பூத்தாலக்குட்டை, அருள்மிகு பூத்தாழீஸ்வரா் கோயிலில் அமாவாசையையொட்டி புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பூத்தாலக்குட்டையில் உள்ள அருள்மிகு பூத்தாழீஸ்வரா் உடனமா் அருள்மிகு புவனேஸ்வரி அம்மன் சுவாமிகளுக்கு அமாவாசையையொட்டி பால், தயிா், திருமஞ்சனம், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திவ்யப் பொருள்களைக் கொண்டு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

கரோனா வைரஸ் பாதுகாப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தா்கள் கோயிலுக்கு செல்லவில்லை. கோயில் அா்ச்சகா் ஆகமவிதிப்படி அபிஷேகம், பூஜைகளை செய்தாா். அமாவாசையையொட்டி, சங்ககிரி வட்டாரத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் ஆகமவிதிப்படி பூஜைகள் நடைபெற்றன.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments