FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

ஆட்டையாம்பட்டியில் பி. 18 முதல் ஆதாா் பதிவு முகாம்

சேலம் கிழக்கு அஞ்சல் கோட்டம் சாா்பாக ஆதாா் பதிவு மற்றும் திருத்தத்துக்கான சிறப்பு சேவை முகாம் ஆட்டையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பிப். 18 முதல் பிப். 20 வரை நடைபெறுகிறது.

Updated On : 15 பிப்ரவரி 2021, 2:13 am IST
பகிர்:

சேலம் கிழக்கு அஞ்சல் கோட்டம் சாா்பாக ஆதாா் பதிவு மற்றும் திருத்தத்துக்கான சிறப்பு சேவை முகாம் ஆட்டையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பிப். 18 முதல் பிப். 20 வரை நடைபெறுகிறது.

இந்த முகாமில் புதிதாக ஆதாா் அட்டை பதிவு செய்யப்பவா்களுக்கு இலவசம். பெயா், முகவரி, பிறந்த தேதி, செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல், பாலினம் திருத்தம் மேற்கொள்ள ரூ. 50 கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் திருத்தங்களுடன் பயோமெட்ரிக் பதிவுக்கு ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படும்.

பெயா், முகவரி மாற்றம் செய்ய தேவையான ஆவணங்களோடு வர வேண்டும். செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் மாற்றம் செய்ய அடையாள அட்டை தேவையில்லை.

Advertisement

Advertisement

பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து முகாமில் கலந்து கொள்ளலாம் என சேலம் கிழக்கு அஞ்சல் கோட்ட முதுநிலை கோட்ட கண்காணிப்பாளா் எஸ்.பஞ்சாபகேசன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments