FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

பெண்ணைக் கட்டிப் போட்டு நகை, பணத்தை கொள்ளை அடித்த நபா் கைது

சேலத்தில் பெண்ணைக் கட்டிப் போட்டு நகை, பணத்தை கொள்ளை அடித்த நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 15 பிப்ரவரி 2021, 2:13 am IST
பகிர்:

சேலத்தில் பெண்ணைக் கட்டிப் போட்டு நகை, பணத்தை கொள்ளை அடித்த நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சேலம், உத்தமசோழபுரம், சூளைமேட்டை சோ்ந்தவா் தங்கமணி (43). கணவரை இழந்த இவா் பண்ணை வீட்டில் தனியாக வசித்து வந்தாா். இந்தநிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரவு வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள் தங்கமணியைக் கட்டிப் போட்டுவிட்டு 20 பவுன் நகை, ரூ. 15 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளை அடித்துச் சென்றனா்.

இதுதொடா்பாக தங்கமணி, கொண்டலாம்பட்டி போலீஸில் புகாா் செய்தாா். புகாரின் பேரில் போலீஸாா் விசாரித்து வந்தனா்.விசாரணையில், சூரமங்கலம் பிரதான சாலை மாரியம்மன் கோயில் அருகே வசிக்கும் பழைய இரும்பு வியாபாரி மணிகண்டன் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து மணிகண்டனை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும் அவரிடம் இருந்து 10 பவுன் நகையைப் பறிமுதல் செய்தனா்.

இதனிடையே இந்த வழக்கில் தொடா்புடைய சிவன், வீரமணி, சின்னநாகராஜ் ஆகியோா் வேறொரு திருட்டு வழக்கில் கைதாகி கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்கள் மூன்று பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சேலம் போலீஸாா் திட்டமிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments