ஆத்தூர் தர்காவில் கந்தூரி மத நல்லிணக்க கொடியேற்று விழா
ஆத்தூர் தர்காவில் 466 ஆண்டு உருஸ் மற்றும் கந்தூரி மத நல்லிணக்க கொடியேற்று விழா நடைபெற்றது.
ஆத்தூர் தர்காவில் 466-வது ஆண்டு உருஸ் மற்றும் கந்தூரி மத நல்லிணக்க கொடியேற்று விழா நடைபெற்றது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் பழையபேட்டை கடைவீதியில் அமைந்துள்ள காதர் வழி உல்லா தர்காவில் 466 ஆம் ஆண்டு உருஸ் மற்றும் கந்தூரி மத நல்லிணக்க விழா நடைபெற்றது,
அதைத் தொடர்ந்து, நடைபெற்ற நிகழச்சியில் நாகூர் தர்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட கொடியேற்றி நிகழ்ச்சி தொடங்கியது.
Advertisement
Advertisement
தென்னகத்தின் இணையில்லா ஞானப் பேரொளி ஹஜ்ரத் சையதினா சையது சாகுல் ஹமீது கதிரொளி கஞ்சஸவாய் பாஷா அவர்களின் ஏற்றமிகு கந்தூரி அன்னதானம் குருஸ் பெருவிழாவிற்கு இன்று இஸ்லாமிய பெருமக்கள் ஏராளமானோர்களையும், அனைத்து சமுதாய பெருமக்களும் கந்தூரி உருஸ் விழாவில் கலந்துகொண்டு துவாவும் பரக்கத்தும் அருளையும் நாகூர் மீரான்
பர்கத் அருளையும் பொதுமக்கள் பெற்றனர்.
மேலும், ஆத்தூர் சுற்றுவட்டார அனைத்துப் பள்ளிவாசல் ஜமாத்தாரகளையும் பொது மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.